இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகம்

0 2646
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 11ஆயிரத்து903 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 11ஆயிரத்து903 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்றைய கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்து 423 ஆக பதிவாகிய நிலையில் இன்று சற்று அதிகரித்து 11 ஆயிரத்து 903 ஆக பதிவாகி உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்று பாதிப்புக்கு 311 பேர் உயிரிழந்தனர்.

ஒரே நாளில் 14 ஆயிரத்து 159 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்ததை அடுத்து, இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 209 ஆக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments