இறையாண்மைக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு

0 2967
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட சீமான் தமிழ்நாடு கொடி என கூறி சீமான் ஒரு கொடியை ஏற்றி வைத்ததாக கூறப்பட்டது.

கொரோனா விதிகளை மீறி அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த கூட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் மற்றும் கொரோனா தடுப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சீமான் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments