அமெரிக்காவில் சிறார்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி...

0 1477

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இறுதி ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஏற்கனவே ஃபைசர் தடுப்பூசியை சிறார்களுக்கு செலுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறையும், அரசின் மருத்துவ ஆலோசனைக்குழுவும் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து அங்குள்ள 2.8 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தும் அதே மருந்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சிறார்கள் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஃபைசர் தடுப்பூசியை சிறார்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த அதிபர் ஜோ பைடன், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணிகளில் இது திருப்புமுனையாக அமையும் என தெரிவித்தார். மேலும், கொரோனா தொடர்பான பெற்றோர்களின் கவலைகளை முடிவுக்குக் கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments