அமெரிக்காவில் திருடிய வேனை மின்னல் வேகத்தில் ஓட்டி பாலத்தின் மீது மோத விட்டு ஆற்றில் குதித்த திருடன்!

0 2533

அமெரிக்காவில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க திருடிய வேனை மின்னல் வேகத்தில் ஓட்டி பாலத்தின் மீது மோத விட்டு ஆற்றில் குதித்த திருடன் கைது செய்யப்பட்டான். சினிமாவில் வரும் துரத்தல் காட்சியையும் மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த துரத்தல் சம்பவம் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.

வேனைத் திருடிய திருடன் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக அதனை மின்னல் வேகத்தில் ஓட்டி எடிசன் பாலத்தின் சுற்றுச்சுவர்களில் அதிவேகமாக மோதி நிறுத்துகிறான். பின்னர் வேனில் இருந்து இறங்கும் திருடன் கீழே ஓடும் ஆற்றில் குதிக்கிறார். அப்போது மீட்பு படகு வழியாக வந்த போலீசார் அந்த திருடனை கைது செய்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments