தென்காசியில் கடன் வசூலிக்க சென்ற நிதிநிறுவன ஊழியர் கொலை!

0 3238

தென்காசி மாவட்டத்தில் கடன் வசூலிக்க சென்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்த ராம சுப்ரமணியன் என்பவர், சுந்தரபாண்டியபுரத்திலுள்ள சண்முகநாதன் என்பவரது வீட்டிற்கு கடன் வசூல் செய்ய சென்றுள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த சண்முகநாதன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ராம சுப்ரமணியனை சரமாரியாக் குத்திவிட்டு தப்பியுள்ளார். ராமசுப்ரமணியன் உயிரிழந்த நிலையில் , போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பதுங்கியிருந்த சண்முகநாதனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments