உலகம் சீனா மீதான மதிப்பை இழந்து வருகிறது - ஜோ பைடன்!

0 1951

ஜி 20 நாடுகள் மாநாட்டை புறக்கணித்த சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜிங்பிங் மிகப்பெரிய தவறு செய்து விட்டார் என்று கிளாஸ்கோவில் உரை நிகழ்த்திய ஜோ பைடன் குறிப்பிட்டார்.

உலகம் சீனா மீது மதிப்பு இழந்து வருவதாக குறிப்பிட்ட அவர் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐநாவின் பருவ நிலை மாநாட்டை புறக்கணித்த சீனா மற்றும் ரஷ்யா எதிர்காலத்தில் தங்கள் மக்களுக்கு என்ன பதிலைக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

உலகம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சினையில் புறமுதுகு காட்டுவதுதான் இந்த இரு நாடுகளின் தலைமைக்கு அழகா என்றும் ஜோ பைடன் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments