காதலனை மகளுக்கு திருமணம் முடித்த மனைவி கொலை..! அரிவாளுடன் வீதியில் நின்ற கணவர்..!

0 6612
காதலனை மகளுக்கு திருமணம் முடித்த மனைவி கொலை..! அரிவாளுடன் வீதியில் நின்ற கணவர்..!

பரமக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்து விட்டு வீதியில் அரிவாளுடன் நின்ற கணவர், அதனை வெல்போனில் படம் பிடித்த நபர்களிடம், போலீசுக்கு தகவல் கொடுக்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது காதலனை மகளுக்கு மாப்பிள்ளையாக்கிய பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த சோமனாத புரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி பூங்கோதை. இவர்களுக்கு 20 வயதில் அபிநயா என்ற மகளும், கலை முருகன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வரும் முருகானந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தனது ஊருக்கு திரும்பி மனைவி குழந்தைகளை பார்த்துச்செல்வது வழக்கம்.

அந்தவகையில் முருகானந்தம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் துபாயில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டில் மகன் கலை முருகன் மட்டும் இருந்துள்ளான். தாயும், சகோதரியும், ரவிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இருப்பதாக கூறிய மகன் அதற்காக தெரிவித்த காரணங்கள் முருகானந்தத்தை ஆத்திரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் இளைஞர் ரவிகிருஷ்ணன் என்பவருடன், மனைவி பூங்கோதைக்கு பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார் . அப்போது பூங்கோதையின் மகளை, ரவிகிருஷ்ணன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

இதையடுத்து கணவரின் சம்மதத்தை கேட்காமல் மகள் அபிநயாவை, தனது காதலன் ரவி கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, பூங்கோதையும் மகளுடன் சென்று அவர்களது வீட்டிலேயே இருந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால் தான் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

இந்த தகவலை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்த முருகானந்தம், தனது மகனை அனுப்பி மனைவியை வீட்டிற்கு திரும்ப வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வர பூங்கோதை மறுத்ததாகவும், சம்பவத்தன்று பூங்கோதையை வீதியில் வைத்து பார்த்துவிட்ட முருகானந்தம், அவரை தடுத்து நிறுத்தி மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்தது குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார்.

ஆனால் பூங்கோதை அவருக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதால் ஆத்திரம் அடைந்த முருகானந்தம் தன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை பயங்கரமாக வெட்டினார், பலத்த காயம் அடைந்த பூங்கோதை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மனைவியை வெட்டிவிட்டு ரத்தம் சொட்ட நின்ற முருகானந்தத்தை சிலர் செல்போனில் படம் பிடிக்க, அவர்களிடம் தனது விவரத்தை சொல்லி போலீசுக்கு தகவல் சொல்லுமாறு கூறியதோடு, கையில் அரிவாளுடன் வீதியில் அப்படியே நின்றார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அரிவாளுடன் அசால்ட்டாக நின்ற முருகானந்தத்தை பிடித்து வேனில் ஏற்றியதுடன், பூங்கோதையின் கொலை சம்பவத்தை பார்த்த நபர்களை சாட்சிகளாக சேர்ப்பதற்காக, அங்கு நின்ற அனைவரையும் மடக்கி பிடித்து பெயர் விவரங்களை சேகரித்தனர்

பூங்கோதையின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். இதில் மருமகன் ரவிகிருஷ்ணனுக்கும், மனைவி பூங்கோதைக்கும் தொடர்பு இருந்ததாக கணவர் முருகானந்தம் கூறினாலும், தற்போது மகள் அபிநயா, கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு உதவி செய்வதற்காகவே, பூங்கோதை மருமகன் ரவிகிருஷ்ணன் வீட்டில் தங்கி இருந்ததாகவும், மகளின் காதல் திருமணமும், மனைவியின் நடத்தையும் பிடிக்காத ஆத்திரத்தில் முருகானந்தம் இந்த விபரீத கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments