வரும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் ; அண்ணா பல்கலைக்கழகம்

0 15092
வரும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தப்படும்

தமிழகத்தில் வரும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கோவிட் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, சுயநிதி நிறுவனங்கள் உட்பட உயர் கல்வி நிறுவனங்களில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டன.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வகுப்புகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இனி ஆன்லைனிலும், புத்தகத்தை பார்த்து எழுதக் கூடிய வகையிலும் தேர்வுகளை நடத்தப்போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இறுதியாண்டு, தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், internal, practical உள்ளிட்ட தேர்வுகள் இனி நேரடியாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments