தீபாவளி வசூலுக்கு ஆலோசனை கூட்டம் வீடியோ சிக்கியது..! விற்பனை குழுவையே வித்துடுவாய்ங்க..!

0 10759
தீபாவளி வசூலுக்கு ஆலோசனை கூட்டம் வீடியோ சிக்கியது..! விற்பனை குழுவையே வித்துடுவாய்ங்க..!

விருதுநகர் மாவட்ட வேளாண் துறையின்  விற்பனை குழு செயலாளர் தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடம் தீபாவளிக்கு பணம் வசூல் செய்து தறுமாறு கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் வணிக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் , பருத்தி மற்றும் பருப்பு வகைகளை கொள்முதல் செய்வது உள்ளிட்ட மிக முக்கியமான அத்தியாவசிய பணிகளை செய்வதற்காக அரசின் வேளாண் விற்பனை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வேளாண் வணிகத் துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஏழு விற்பனை மையங்கள் செயல்படுகிறது. இந்த விற்பனை குழுவின் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வேலுச்சாமி என்பவர், தீபாவளி நெருங்கி வரும் நிலையில், தன்னை தேடி வரும் பல்வேறு நபர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டி உள்ளதால், வணிக நிறுவனங்களிலும், வேளான் விற்பனை மையங்களிலும் கணிசமான தொகையை மாவட்டம் முழுவதும் வசூலித்து தரவேண்டும் என்றும், தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி மிரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் கீழ் உள்ள அதிகாரிகள் தங்களால் வசூல் செய்ய இயலாது என்று கூறியதால், வேலுச்சாமி , தானே பார்த்துக் கொள்வதாக கூறி தன்னை சாந்தப்படுத்திக் கொண்டார்.

இந்த வசூல் ஆலோசனைக்கூட்ட வீடியோ குறித்து விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமியிடம் விளக்கம் கேட்ட போது, தான் அப்படி ஏதும் பேசவே இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments