பில் கேட்ஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

0 1679
பில் கேட்ஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸை சந்தித்து உரையாடினார்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பில் கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் இந்தியாவில் மேற்கொள்ளும் நற்பணிகளுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பில் கேட்ஸ், Mission Innovation என்ற தனது திட்டத்தின் மூலம் இந்தியாவில் சுற்றுச்சூழலை மேம்படுத்த மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments