இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0 1957
ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நில பரப்பில் கல்லூரி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே கல்லூரி தொடங்க வேண்டும் என்பதால், கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக கல்லூரி கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு நூலகம், 7 வகுப்பு அறைகள், முதல்வர் அறை, நிர்வாக அறை, கணினி அறை, உதவி பேராசிரியர்கள் அறைகளும் உள்ளன. நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments