டி-20 உலகக்கோப்பை "சூப்பர் 12" சுற்று - வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா வெற்றி

0 2958

டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

அபு தாபியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி, தென் ஆப்ரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 84 ரன்களில் சுருண்டது. 4 வங்கதேச பேட்ஸ்மேன்கள் பூஜ்ஜியத்தில் பெவிலியன் திரும்பினர். தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா (Rabada) மற்றும் நோர்ஜி (Nortje) தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.

எளிய இலக்கை சேஸ் செய்த தென் ஆப்ரிக்க அணி 14 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் பவுமா ((Bavuma )) அதிகப்பட்சமாக 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments