தனியார் நிறுவனத்தில் இருந்து பழமையான சிலைகள் மீட்பு..! ரூ.110 கோடிக்கு விற்க முயற்சி - 2 பேர் கைது

0 1899

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு, 110 கோடி ரூபாய்க்கு விற்கப்படவிருந்த 3 தொன்மையான உலோக சிலைகள் மீட்கப்பட்டன.

ரகசிய தகவலின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் “காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எக்ஸ்போசிசன் லிமிட்டட்” என்ற நிறுவனத்தில் சோதனையிட்ட போது, சிவன் சிலை ஒன்றும், 15 விற்பனை ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் தஞ்சாவூரில் இதன் கிளை நிறுவனமான சாஹா டிபார்ட்மென்டல் ஸ்டோரில் நடந்த சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த எட்டுக் கை விஷ்ணு சிலைகள் இரண்டு மீட்கப்பட்டன.

மேலும் விநாயகர், விஷ்ணு உள்ளிட்ட 4 உலோக சிலைகளை அவர்கள் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்ததால், அவற்றை ஒப்படைக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் 2 பேரிடமிருந்து விநாயகர் மற்றும் விஷ்ணு ஆகிய 2 சிலைகளை மீட்டு, அவர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments