நைஜீரியாவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

0 1585

நைஜீரியாவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

வர்த்ததகத் தலைநகரான லாகோஸில் புதிதாக கட்டப்பட்டுவரும் 20 மாடி சொகுசு குடியிருப்பை வாடிக்கையாளர்கள் பார்வையிட சென்ற போது அது இடிந்து விழுந்தது.

இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மாயமான சுமார் நூறு பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாமலும், தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதாலும் நைஜீரியாவில் கட்டிடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments