13 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் - மேற்கு வங்கத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி

0 3434

மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 29 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில் பாஜக 2 சட்டமன்ற இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிப் பெற்றன.

அசாமில் 3 சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவும், 2 இடங்களில் ஐக்கிய மக்கள் கட்சியும் வெற்றிப் பெற்றன.

இதே போல், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி 2 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வென்றன. மேலும், மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தாத்ரா நாகர் ஹவேளி மற்றும் டாமன் மற்றும் டையூவில் சிவசேனா கட்சி வென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments