முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - நவ.9-ம் தேதி அதிமுக  கண்டன ஆர்ப்பாட்டம்

0 2041

முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் வருகிற 9-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல், கேரள அரசின் நிர்பந்தம் காரணமாக நீர் இருப்பை குறைத்திருக்கும் திமுக அரசுக்கும், தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கும் கண்டனத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில், தற்போதைய தமிழ் நாடு அரசு உறுதித் தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments