பொலிவியாவில் ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு... சாலைகளில் கொட்டிக் கிடந்த 5,000 டன் ஆலங்கட்டிகள் அகற்றம்!

0 2362

பொலிவியாவின் டரிஜா நகரில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது சுமார் 5 அடி உயரத்துக்கு ஆலங்கட்டிகள் குவிந்து கிடந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

சாலைகளில் இருந்து 5,000 டன் எடையிலான ஆலங்கட்டிகள் அகற்றப்பட்டதாக அந்நகர மேயர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments