தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

0 4507

தமிழகத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். தெற்கு ஆந்திரா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் இரண்டு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் டெல்டா பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் நகரின் சில பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 20 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடலில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இன்று ஒரு நாள் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments