இலங்கை தமிழர்களுக்கு... 3,510 புதிய குடியிருப்புகள்... முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

0 1884

தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு 142கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக 3ஆயிரத்து510 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

இலங்கை தமிழர் நலனுக்காக புதிய வீடுகள் கட்டித் தருதல், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் இலங்கை தமிழர் முகாமில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 142கோடி ரூபாய் மதிப்பில், 3,510 புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதுதவிர, முகாம்களில் குடிநீர், சாலை, கழிப்பிட உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான 30கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், 53 கோடியே 51லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை, மகளிர் சுய உதவி குழுவினருக்கு நிதியுதவி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தொழில் பயிற்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்கள் அகதிகளும் அல்ல, அனாதைகளும் அல்ல, அவர்களும் நம்மில் ஒருவர் என உருக்கமாக கூறினார்.

இதனை தொடர்ந்து, மேல்மொணவூர் இலங்கை தமிழர் குடியிருப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேட்டறிந்தா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments