தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச்சந்தை... ரூ.1 கோடி வரை வர்த்தகம்!

0 10014

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் விற்பனை களைகட்டியது. நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

ஆடுகள் வாங்க ஆர்வம் காட்டிய பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஆடுகளை வாங்கி சென்றனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் மற்றும் நாட்டுக் கோழிகள் விற்பனையாகின.

இதேபோல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments