விரைவில் இந்தியாவில் இணைய சேவையை வழங்க எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் திட்டம்

0 3553

எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் விரைவில் இந்தியாவில் இணைய சேவையை வழங்க உள்ளதாக நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான தலைவர் சஞ்சய் பார்கவா  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் இணைய சேவை வழங்குவதற்கான உரிமங்களை பெற இந்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளதாகவும், வங்கி கணக்குகள் தொடங்குவது உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்டார் லிங் நிறுவனம் அதிவேக பிராட்பேண்ட் இன்டெர்னெட், சேட்டிலைட் செல்போன்கள், வயர் மற்றும் வயர்லெஸ் தொலைத் தொடர்பு இணைப்பு உள்ளிட்ட வணிக சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக அனுமதி கிடைத்ததும் டெல்லி மற்று அதனை சுற்றியுள்ள கிராமப்புற மாவட்ட பள்ளிகளில் 100 இலவச இணைப்புகளை வழங்க திட்டமிட்டு உள்ளதாக சஞ்சய் பார்கவா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments