நைஜீரியாவில் 21 மாடி கட்டடம் சரிந்து விழுந்து 3 பேர் பலி

0 2363

நைஜீரியாவில் 21 மாடி கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாகோஸ் நகரில் Fourscore Homes என்ற தனியார் நிறுவனம் கட்டி வந்த 21 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments