மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்..

0 2443
மேற்கு வங்கத்தில் பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசுகள் விற்கவும், வெடிப்பதற்கும் முழுமையாக தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணையின்போது, பட்டாசுகளை வெடிக்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிமன்றம், பசுமை பட்டாசுகள் என்ற பெயரில் போலியாக விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments