நீதிமன்ற உத்தரவை மீறியதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்டு

0 5188

நீதிமன்ற உத்தரவை மீறியதாக  நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பரமத்தி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ராசப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கோவில் நிலங்கள் இருப்பதாக பட்டாவில் கூறப்பட்டதை நீக்க வலியுறுத்தி பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையில் அந்த நிலங்கள் ராசப்பனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்ததை அடுத்து அவருக்கு தனி பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியர், பரமத்திவேலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தனி பட்டா வழங்கப்படாததால் ராசப்பன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இது குறித்த வழக்கு விசாரணைக்கு அரசு தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments