எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

0 9005
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த  செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதி இருந்தார்கள். நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட பிரச்சனை காரணமாக நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தடையை நீக்கியதால் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் குளறுபடிகளைத் தவிர்க்க, நீட் தேர்வு மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படாமல், மாணவர்களின் தனிப்பட்ட ஈமெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments