மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணம் ரூ.6000 ஆக உயர்வு - முதலமைச்சர்

0 2526

மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு 5,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்துக்கு 24 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகைகள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 2022 ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரலில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments