டெல்லியில் இனிப்புக் கடைக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்

0 2079

டெல்லியில் இனிப்புக் கடைக்குள் புகுந்த 2 பேர் அங்கு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அன்று நஜாஃப்கர் பகுதியில் உள்ள மிட்டல் ஸ்வீட்ஸ் என்ற அந்த இனிப்புக் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி 4 முறை சுட்டனர்.

இருசக்கர வாகனத்தில் முகமூடியுடன் இனிப்புக் கடைக்கு வந்த நபர்கள்,கடையின் உரிமையாளரிடம் இனிப்பு வகைகளின் விலைகளை கேட்டதாகவும், பின்னர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அக்கடையின் அருகே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments