வாடகை வீட்டில் தங்கி தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ22 லட்சத்துடன் ஓட்டம் பிடித்த பெண்..

0 2880
சென்னை திருவொற்றியூரில் 100க்கும் மேற்பட்டவர்களிடம் தீபாவளிச் சீட்டு நடத்தி, 22லட்ச ரூபாயுடன் தலைமறவான பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் 100க்கும் மேற்பட்டவர்களிடம் தீபாவளிச் சீட்டு நடத்தி, 22லட்ச ரூபாயுடன் தலைமறவான பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காலடிப்பேட்டை ஒண்டிக்குப்பம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஆயிஷா என்ற பெண் தன் சகோதரர் நாகூர் என்பவரின் உதவியுடன், தீபாவளிச் சீட்டு, தினசரி சேமிப்பு சீட்டு என நடத்தி வந்துள்ளார்.

திருச்சினாங்குப்பம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் அவரிடம் சீட்டில் இணைந்துள்ளனர்.

கடந்த மாதம் 7ஆம் தேதி பணம் செலுத்துவதற்காக சென்ற பெண்கள், 11ஆம் தேதியிலிருந்து அவரின் வீடு பூட்டிக் கிடப்பதும், செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதும் தெரியவந்ததால் புகார் அளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments