தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு

0 4447

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் தினமான நவம்பர் 4-ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள சரவெடி, பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வெடிக்க கூடாது என்றும், அதிக சப்தம் எழுப்பக்கூடிய மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments