வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்தது ஏமாற்றம் அளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ்

0 2771
வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்தது ஏமாற்றம் அளிக்கிறது

வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீட்டை மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலைகளிலும் சேர்ந்துள்ளோரின் நலன்களையும், சமூக நீதியையும் பாதுகாக்க, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments