இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்

0 1969

கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள், ஆஸ்திரேலியா வர கட்டுப்பாடுகள் இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச பயணிகள் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் மற்றும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் போட்டிருந்தால், அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டோராக அங்கீகரிக்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய அரசு குறிப்பிட்டுள்ளது.

கோவேக்சின், சினோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், கொரோனாவால் கடந்த 18 மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது அங்கு தொற்று குறைய தொடங்கியதை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments