2022 ஜனவரி 1 இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம்களிலும், இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

0 2278

ஜனவரி முதல் நாளைத் தகுதிநாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தோரும், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரும் பெயர்களைச் சேர்க்கச் சிறப்பு முகாம்களிலும், இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, பெயரை வேறு முகவரிக்கு மாற்றத் தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகவரிச் சான்று நகலை இணைக்க வேண்டும். வயதுக்கான சான்றாகப் பிறப்புச் சான்று, மதிப்பெண் சான்று, பான், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் ஆகியவற்றில் ஒன்றின் நகலை வழங்க வேண்டும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments