நடிகர் புனித் ராஜ்குமாரின் உதவியோடு கல்வி பயின்ற 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்க தயார் - நடிகர் விஷால்

0 6168
நடிகர் புனித் ராஜ்குமாரின் உதவியோடு கல்வி பயின்ற 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்க தயார்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உதவி மூலம் கல்வி பயின்று வந்த ஆயிரத்து 800 மாணவர்களின் படிப்புச் செலவை தாம் ஏற்றுக் கொள்ள தயார் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இலவசப் பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், கோசாலைகள் முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றை  நடத்தி வந்த நடிகர் புனித், ஆயிரத்து 800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற எனிமி திரைப்படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், புனித் விட்டுச் சென்ற பணிகள் அவரோடு நின்று விடக்கூடாது என்றும், அவரது குடும்பத்தினர் அனுமதி அளித்தால் ஆயிரத்து 800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்த ஆண்டு முதல் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments