நவ. 2, 3 - சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிப்பு

0 1628
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள், அந்த இரு நாட்களில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இரவு 11 மணி முதல் 12 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments