போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்... உயிருக்குப் போராடும் நோயாளி... ஆம்புலன்சை டிவைடரில் ஏற்றி எதிர்சாலையில் சென்ற ஓட்டுநர்

0 2273

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சை சாலை நடுவே இருந்த ஒரு அடி உயர காங்கிரீட் டிவைடர் மீது சாமர்த்தியமாக ஏற்றி, எதிர்புற சாலை வழியாக நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சனிக்கிழமை பாகூரைச் சேர்ந்த ஒருவர் எலி மருந்தை சாப்பிட்டதாக ஆபத்தான நிலையில், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கவே, மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

சிவக்குமார் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்ற அந்த ஆம்புலன்ஸ் 100 அடி சாலையிலுள்ள மேம்பாலம் ஒன்றில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. உயிருக்குப் போராடும் நோயாளியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சமயோசிதமாக யோசித்த ஓட்டுநர் சிவக்குமார், சாலை நடுவே இருந்த டிவைடரில் ஆம்புலன்சை சாமர்த்தியமாக ஏற்றி, எதிர்சாலை வழியாக ஜிப்மரை சென்றடைந்தார்.

தீபாவளிப் பொருட்களை வாங்குவதற்காக புதுச்சேரியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து மக்கள் நகருக்குள் வந்து குவிவதால், பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments