"சினிமா HERO அல்ல MLA ''- உதயநிதியை மாணவர்களிடத்தில் அறிமுகப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!

0 2594

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தொடக்க பள்ளிக்கு திடீரென சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவர்களை வரவேற்றார்.

பெத்தநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் எந்தவித முன்னறிவிப்பின்றி வந்த உதயநிதி ஸ்டாலின் பேனா, பென்சில், பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்றார்

இதனிடையே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் "இங்கே நின்று கொண்டிருப்பவர் யார் என்று தெரிகிறதா..?" என உதயநிதியை காட்டி மாணவர்களிடம் கேட்க அதற்கு மாணவர்கள் அவரை திரைப்படத்தில் பாத்திருக்கிறோம் என கூற, வகுப்பறையில் சிரிப்பலை எழுந்தது. அப்போது அன்பில் மகேஷ், அவர் ஒரு எம்.எல்.ஏ. என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments