நீர் தேக்க தொட்டியின் சுவர் இடிந்து விழுந்து, உறங்கிக் கொண்டிருந்த பாட்டி, பேரன் உயிரிழப்பு

0 1524

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், பக்கத்து வீட்டு நீர் தேக்கத் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்ததில், ஓட்டு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேரனும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

சுப்பிரமணியன் என்பவரது 2 தளம் கொண்ட கான்கிரீட் வீட்டுக்கு பக்கத்துலேயே ஆறுமுகம் என்பவரது ஓட்டு வீடும் அமைந்துள்ளது. 2 நாட்களாக அங்கு பெய்து வரும் கனமழையால் சுப்பிரமணியன் வீட்டுக்கு மேலே மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த நீர் தேக்க தொட்டி உறுதி தன்மை இழந்து இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு அந்த தொட்டியின் ஒரு பகுதி திடீரென சரிந்து ஓட்டு வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் ஓட்டு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பாட்டி தாய் லட்சுமியும், பேரன் அஜித்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

அஜித்குமாருக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், சுவர் இடிந்து விழுந்து அவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments