கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை பின் தொடர்ந்து 2 கிலோ தங்கம் வழிப்பறி!

0 51784

கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நகை வணிகரை பின் தொடர்ந்து வந்து கத்தியை காட்டி மிரட்டி 2 கிலோ தங்கத்தையும், 7 லட்ச ரூபாய் பணத்தையும் வழிப்பறி செய்த மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த சண்முகம் என்பவர், நகைகளை மொத்தமாக வாங்கி, ஹால்மார்க் செய்து, நகைக்கடைகளுக்கு விநியோகிக்கும் தொழில் செய்து வந்தார். சனிக்கிழமை இரவு சத்தியமங்கலம் சென்று நகைகள் வாங்கிக்கொண்டு திரும்பியவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் வடவள்ளியில் உள்ள தனியார்  பள்ளி அருகே வழிமறித்தனர்.

சண்முகத்தின் முகத்தில் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 2 கிலோ தங்க நகைகள் மற்றும் 7 லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

இது தொடர்பாக சண்முகத்தின் மகள் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments