சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை திடீரென கடந்த சிறுத்தை, வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.!

0 8432

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் சிறுத்தையின் வீடியோ வெளியாகியுள்ளது.

சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் பகுதியில் சாலையோரம் காத்திருந்த சிறுத்தை திடீரென வேகமாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி வீடியோ பதிவு செய்த நிலையில், வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குமாறும், வனவிலங்குகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments