அறிவியல் ஆற்றலின் முழுமையான பலன்களை அனுபவித்த நாடுகள் கரியமிலத்தை குறைக்க வேண்டும் -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

0 1796

அறிவியல் ஆற்றலின் முழுமையான பலன்களை அனுபவித்த வளர்ந்த நாடுகள் கரியமில வாயுவைக் குறைக்க முன்வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரோமில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அடுத்து வரும் தலைமுறையினருக்கு பூமியை மேலும் மேம்பட்டதாக வழங்க வளர்ந்த நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நிலக்கரி பயன்பாட்டைக் குறைப்பதற்கு  அணுசக்தி உற்பத்தியாளர்கள் குழுவில் இணைய வேண்டும் என்றும், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கார்பன் சமநிலையைக் கொண்டு வர வேண்டும் என்றும் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments