தீபாவளிப் பண்டிகைக்காக வெளியூர் செல்ல இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள்

0 4525

தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 3-ஆம் தேதி வரை சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மூன்று நாட்களில் சென்னையில் இருந்து மொத்தம் 9 ஆயிரத்து 806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6 ஆயிரத்து 734 பேருந்துகளும் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர், பூவிருந்தவல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments