நான் மாஸ்க் போடல...நான் மாஸ்க் போட மாட்டேன்... அபராதம் விதித்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்த நபர்!

0 2931

சென்னை பாரிமுனையில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தமக்கு போலீசார் அபராதம் விதித்ததாக கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.

பாரிமுனை பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்களை பிடித்து காவல்துறையினர் அபராதம் விதித்து கொண்டிருக்கும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்ததாக கூறப்படுகின்றது.

அவரை வழிமறித்த போலீசார் முகக்கவசம் அணியவில்லை என வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததாக அந்த நபர் கூறுகிறார். தனக்கு மூச்சுத்திணறல் இருப்பதால் முகக் கவசம் அணிய முடியாது எனக் கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வீடியோவும் எடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments