ஜப்பானில் ஓடும் ரயிலில் ஜோக்கர் வேடமணிந்த நபர் பயணிகளை கத்தியால் குத்தி திடீர் தாக்குதல்!

0 2268

ஜப்பானில் ஓடும் ரயிலில் ஜோக்கர் வேடமணிந்த நபர் நடத்திய தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர். ஷின்ஜுகு ரயில் நிலையம் நோக்கி சென்ற ரயிலில் காமிக்ஸ் கதாபாத்திரம் ஜோக்கர் போல் வேடமணிந்த ஒருவன், திடீர் தாக்குதலில் ஈடுபட்டான். பயணிகளை கத்தியால் குத்திக் கிழித்தும், ஆசிட் வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சிறிய குண்டு போல் வீசி ரயிலில் தீப்பிடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த பயணிகள் அலறியடித்தபடி ஓடியும், ரயில் ஜன்னல்கள் வழியாக எகிறிக் குதித்தும் தப்பினர். சம்பவத்தில் ஈடுபட்டவனைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments