சென்னையில் இரவு தொடங்கி அதிகாலை வரை மழை

0 2340

சென்னையில் நேற்று பகலிலும் இரவிலும் விட்டு விட்டு கனமழை பெய்தது. விடிய விடிய நேற்று கனமழைக் கொட்டியது. இன்று காலைவரை மழை நீடித்திருந்தது.

இன்று மாலை வரை இதே போல் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாலவாக்கம், ஈ.சி.ஆர், திருவான்மியூர், விருகம்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு, வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக சென்னையில் குளுகுளு என காற்றுவீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று பணிகளுக்குத் திரும்ப வேண்டியிருப்பதால் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் பொருட்களை வாங்க முடியாமலும் தவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments