தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறப்பு!

0 3913

தமிழகத்தில் 600 நாட்களுக்குப்பின், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்படுவதை ஒட்டி மாணவ-மாணவிகளை வரவேற்க பள்ளிகள் தயாராகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணாக்கர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிர்வு, கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மாணாக்கர்களுக்கு முக்கியப் பாடக் கருத்துகளை உள்ளடக்கிய புத்தாக்கப் பயிற்சியை மேற்கொண்ட பிறகே முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments