ஓடும் ரயிலில் ஜோக்கர் வேடத்தில் வந்த நபர் நிகழ்த்திய கண்மூடித்தனமானத் தாக்குதல் ; 10க்கும் மேற்பட்டோர் காயம்

0 2747
ஓடும் ரயிலில் நிகழ்த்தப்பட்டத் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானில், ஓடும் ரயிலில் "ஜோக்கர்" வேடத்தில் வந்த நபர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உலகின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் என வர்ணிக்கப்படும் ஷின்ஜுகு ரயில் நிலையம் நோக்கி சென்ற ரயிலில், ஹாலோவீன் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர்.

பேட்மேன் திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரமான ஜோக்கர் வேடத்தில் வந்த 24 வயது நபர், சக பயணிகள் மீது கத்தி மற்றும் ஆசிட் வீசித் தாக்கத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அவன் நிகழ்த்திய சிறிய குண்டு வெடிப்பால் ரயிலில் தீ பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதை கண்டு திகைத்துப் போன ரயில் பயணிகள், அடுத்தடுத்த பெட்டிகளை நோக்கி அலறியடித்தபடி ஓடிய நிலையில், பயணிகள் ரயிலின் ஜன்னல்கள் வழியாக பிளாட்பார்ம் மீது குதித்தனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

இந்த களேபரத்தில், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தாக்குதல் நடத்திய கொடூரன் மெட்ரோ ரயில் பெட்டிக்குள் புகைபிடித்தபடி அமர்ந்திருந்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments