நடு ரோட்டில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய போதை ஆசாமி ; வாகன ஓட்டிகள் அச்சம்

0 2454
நடு ரோட்டில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய போதை ஆசாமி

நாமக்கல்லில் போதை தலைக்கு ஏறிய நிலையில் நடு ரோட்டில் பட்டாசு வெடித்து அலப்பறை செய்த குடிமகனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

எந்த நேரமும் வேட்டி அவிழலாம் என்ற நிலையில் இருந்த அந்த போதை ஆசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடையில் கொஞ்சம் பட்டாசுகளை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நடு ரோட்டில் வைத்து அவற்றை வெடித்து அலப்பறை செய்தார்.

போதை ஆசாமியின் செயலால் அவ்வழியாகச் சென்றவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். தீபாவளி சீசன் என்பதால் பல இடங்களில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைந்திருக்கின்றனர்.

தன்னிலை மறக்கும் அளவுக்கு போதை ஏறித் திரியும் இதுபோன்ற நபர்கள் கைகளில் பட்டாசுகள் கிடைத்தால், பெரும் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments