டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ; ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

0 3283
டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ; ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது. அபு தாபியில் நடைபெற்ற டி-20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து, 160 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ஷஜத் அதிகப்பட்சமாக 45 ரன்களும், கேப்டன் நபி ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய நமீபிய பேட்ஸ்மேன்கள் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இறுதியில் நமீபியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments