தடுப்பூசி குறைவாக செலுத்திய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

0 2488
தடுப்பூசி குறைவாக செலுத்திய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை

நாட்டில் கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தியுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 3-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

காணொலி மூலம் நடைபெற உள்ள இந்த ஆலோசனையில் சுமார் 40 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்க உள்ளனர். மகாராஷ்டிரா, ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில மாவட்டங்கள் 50 சதவீதத்திற்கும் குறைவான அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ளன.

இதனை அடுத்து, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 10 கோடியே 34 லட்சம் பேர் உரிய காலத்தில் 2-வது டோஸ் எடுத்துக் கொள்ளாமல் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அண்மையில் தெரிவித்திருந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments