காதலிப்பதாகக் கூறி 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ; 5 பேர் கைது

0 2812
காதலிப்பதாகக் கூறி 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ; 5 பேர் கைது

சென்னை திருமங்கலத்தில் விடுதியில் அடைத்து வைத்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாடி பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமி கடந்த 27ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்த நிலையில், மறுநாள் சிறுமி வீடு திரும்பி இருக்கிறார்.

விசாரணையில் வீட்டு வேலைக்குச் சென்று வந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவன் காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அவனைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் சிலரும் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின்படி, 4 பேரை கைது செய்த போலீசார், அவரை அடைத்து வைத்திருந்த விடுதி உரிமையாளரையும் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments